ஆதிநாராயணசாமி மலை, அந்தரகங்கே மலை உள்ளிட்ட 10 மலைகளை மூலிகை களஞ்சியமாக அறிவியுங்கள்…

பெங்களூரு : கோலார் மாவட்டத்தில் உள்ள அந்திர கங்கே, சிக்கபள்ளாபுரா மாவட்டத்தில் உள்ள ஆதிநாராயணசாமி மலை உள்ளிட்ட பத்து பாரம்பரிய மலைகளை மூலிகை களஞ்சியமாக அறிவிக்க வேண்டும் என்று கர்நாடக மாநில தாவரவியல் மேம்பாட்டு கழகம் சிபாரிசு செய்துள்ளது.கர்நாடக மாநிலத்தில் மூலிகை செடிகள் அதிகம் உள்ள மலை மற்றும் காடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக ஆனந்த ஹெக்டே ஆஷிரா தலைமையில் கர்நாடக மாநில தாவரவியல் கழகத்தை மாநில அரசு அமைத்துள்ளது. அக்குழுவினர் மாநிலம் முழுவதுமுள்ள மலைகள், காடுகளில் ஆய்வு செய்து முதல் கட்டமாக 10 மலைகளை மூலிகை களஞ்சியமாக அறிவிக்கும் படி சிபாரிசு செய்துள்ளது.அதில், கோலார் மாவட்டத்தில் உள்ள அந்தரகங்கே மலை, சிக்கபள்ளாபுரா மாவட்டம், குண்டிபண்டா தாலுகாவில் உள்ள தேவரகாடு என்று போற்றப்படும் ஆதிநாராயணமலை, தென்கனரா மாவட்டம், கடப தாலுகாவில் குமரதார நதிேயாரத்தில் உள்ள உரும்பி மலை, பெங்களூரு ஊரக மாவட்டம், நெலமங்கலா தாலுகாவில் உள்ள மஹிமாரங்க மலை, சிக்கமகளூரு மாவட்டத்தில் உள்ள சகுனகிரி மற்றும் ஹொரகே கனுகிரி மலைகள், வடகனரா மாவட்டம், சிர்சி தாலுகா, சேர்ந்தா கிராமத்தில் உள்ள முண்டிகே ஆகிய மலைகளை ‘மாநில மூலிகை களஞ்சியமாக’ அறிவிக்க வேண்டும் என்று அரசுக்கு சிபாரிசு செய்துள்ளனர்….

Related posts

இலங்கை கடற்படை அட்டுழியம்: தமிழ்நாடு மீனவர்கள் மேலும் 23 பேர் சிறைபிடிப்பு..!!

ஆக.20 வரை கெஜ்ரிவாலுக்கு காவல் நீட்டிப்பு: டெல்லி நீதிமன்றம் உத்தரவு

வக்ஃபு சட்டத்திருத்த மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்புவதாக நாடாளுமன்றத்தில் கிரண் ரிஜிஜு அறிவிப்பு!!