ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி கட்டும் பணி தீவிரம்

 

கோவை, ஜூலை 5: கோவை டாக்டர் பாலசுந்தரம் சாலையில் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் ஆதிதிராவிடர் கல்லூரி மாணவர் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதி வளாகத்தில் இரண்டு மாணவர் விடுதி உள்ளது. இதில், சுமார் 290 மாணவர்கள் தங்கி அரசு கல்லூரிகளில் படித்து வருகின்றனர். இதில், ஒரு மாணவர் விடுதி கட்டிடம் கட்டப்பட்டு 30 ஆண்டுகளுக்கு மேலான நிலையில், கட்டிடம் பழுதடைந்து காணப்பட்டது. இதனால், புதிய கட்டிடம் அமைத்து தர வேண்டும் என மாணவர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், 250 மாணவர்கள் தங்கும் வகையில் ரூ.14.87 கோடி மதிப்பில் டாக்டர் அம்பேத்கர் ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவர் விடுதி கட்டிடம் மற்றும் 150 மாணவர்கள் தங்கும் வகையில் ரூ.3.51 கோடி மதிப்பில் டாக்டர் அம்பேத்கர் ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவர் கூடுதல் விடுதி கட்டப்பட்டு வருகிறது. இதில், கூடுதல் விடுதி கட்டுமான பணிகள் 90 சதவீதம் வரை முடிந்த நிலையில், ஒரிரு மாதங்களில் திறக்கப்படும் என தெரிகிறது. இந்த பணிகளை 5 மாதத்தில் முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை