ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை

 

திருப்பூர், செப்.24: திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வீட்டுமனை பட்டா மற்றும் முதியோர் உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை வேண்டியும், சாலை வசதி, குடிநீர் வசதி வேண்டியும் என பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 516 மனுக்களை கலெக்டர் பெற்று கொண்டதுடன் மனுதாரர்கள் முன்னிலையிலேயே விசாரணை செய்து அதன் மீது உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

தொடர்ந்து, ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் கருணை அடிப்படையில் 1 நபருக்கு தாராபுரம் அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி சமையலர் நிலையில் பணிநியமன ஆணையை கலெக்டர் வழங்கினார்.கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கார்த்திகேயன், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) சாம் சாந்தகுமார் தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) குமாரராஜா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) மலர், (தேர்தல்) ஜெயராமன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் புஷ்பாதேவி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் செல்வி, துணை கலெக்டர்கள் மற்றும் அனைத்து அரசு துறைகளின் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related posts

வார்டு குழு அலுவலக அறிவிப்பு பலகையில் மாநகர சாலையோர வியாபாரிகள் பட்டியல்: மாநகராட்சி கமிஷனர் தகவல்

வௌிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி: லட்சக்கணக்கில் பணத்தை இழந்த இளைஞர்கள் கலெக்டரிடம் மனு

மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம்