ஆதார் உடன் வாக்காளர் அட்டை இணைக்கும் பணி தொடர்பான ஆலோசனை நடத்த அணைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க ஈ.பி.எஸ்க்கு அழைப்பு: ஓ.பி.எஸ் புறக்கணிப்பு…

சென்னை: அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு அனைத்து கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டத்திற்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்திருக்கிறது. இந்திய தேர்தல் ஆணையம் வருகின்ற 1ம் தேதி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியுடன் ஆலோசனை கூட்டத்தை நடத்துகிறது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட மாநில மற்றும் தேசிய கட்சிகளுக்கு தலைமை தேர்தல் அதிகாரி சார்பாக 13 நீதிபதிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அந்த கடிதம் பிரதானமாக தற்போது எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, வருகின்ற ஆகஸ்ட் 1ம் தேதி வாக்காளர் பட்டியலை ஆதார் உடன் இணைக்க கூடிய பணி நடைபெறவுள்ளது.அது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியுடன் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளது. இந்த கூட்டத்திற்கு ஒவ்வொரு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டது. அதன் அடிப்படையில் அதிமுக தலைமை அலுவலகம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் செயல்படுகிறது. ஆகையால், அந்த அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டதால் எடப்பாடி பழனிசாமி தரப்பில்  இந்த அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர். அந்த கட்சி கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் இன்பத்துறை ஆகியோர் பங்கேற்கவுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால், இந்திய தேர்தல் ஆணையம் தற்போது எடப்பாடி பழனிசாமி தரப்பை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக தெரிவித்துள்ளது. இந்த அனைத்து கட்சி கூட்டத்திற்கு ஓ.பி.எஸ் க்கு அழைப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.       …

Related posts

புரசைவாக்கம் திடீர் நகரில் அடிப்படை வசதிகள் கோரி கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

ஐ.டி துறை சார்ந்த பட்டதாரிகள் நலன் கருதி மாதவரத்தில் ஹைடெக் சிட்டி: வடசென்னை மக்கள் கோரிக்கை

96 வயது சுதந்திர போராட்ட வீரருக்கான ஓய்வூதிய பாக்கி ரூ.15 லட்சம் அரசால் வழங்கப்பட்டது: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்