ஆண்டிபட்டி பகுதியில் வெயிலால் பசுந்தீவனமின்றி ஆடு, மாடு வளர்ப்போர் அவதி-பால் உற்பத்தி பாதிப்பு

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி பகுதியில் வெயிலின் தாக்கத்தால் மேய்ச்சல் நிலங்களில் உள்ள புற்கள், செடி, கொடிகள் காய்ந்து வருகின்றன. இதனால், பசுந்தீவனம் கிடைக்காமல், கால்நடை வளர்ப்போர் அவதிப்படுகின்றனர். பசு, எருமை மாடுகள் தரும் பாலின் அளவும் குறைந்து வருகிறது. தேனி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால், ஆண்டிபட்டி பகுதியில் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக மழை இல்லாததால் நீர்வரத்து ஓடைகள், கண்மாய்கள், குளம், குட்டைகள் வறண்டு கிடக்கின்றன. இதனால், மேய்ச்சல் நிலங்களில் வளரும் புற்கள், செடி, கொடிகள் காய்கின்றன. தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், கால்நடைகளுக்கு பசுந்தீவனங்கள் கிடைக்காமல், கால்நடை வளர்ப்போர் தவித்து வருகின்றனர். கால்நடை வளர்ப்பவர்கள் தாங்கள் வளர்க்கும் ஆடு, மாடுகளை அந்தந்த பகுதியில் உள்ள மலைப் பகுதிகளுக்கும், விவசாயம் இல்லாத தரைப் பகுதிகளுக்கும் மேய்ச்சலுக்காக அழைத்து செல்வர். பருவமழை காலம் முடிந்து கால்நடைகளுக்கு இயற்கையான பசுந்தீவனங்கள் அதிகமாக கிடைக்கும். ஆனால், கடந்த 3 மாதங்களாக மழை பெய்யாததால், அனைத்து பகுதிகளும் வறண்டு கிடக்கின்றன. கடந்த ஆண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை ஓரளவு பெய்த போதும், இந்த ஆண்டு தொடக்கம் முதல் மழை பெய்யவில்லை. கோடை தொடங்குவதற்கு முன்பே, வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், தரிசு நிலங்களில் வளர்ந்திருந்த செடிகள் அனைத்தும் காய்ந்துவிட்டன. இதனால், கால்நடை வளர்ப்போர் ஆடு, மாடுகளை 10 கிலோ மீட்டர் தூரம் வரை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றும் பசுந்தீவனம் கிடைக்கவில்லை என்கின்றனர். மலைப்பகுதி மற்றும் விவசாயம் அல்லாத மேய்ச்சல் நிலங்களில் தீவனங்கள் கிடைக்காததால், கால்நடை வளர்ப்போர் பெரும் அவதியடைந்து வருகின்றனர். பால் உற்பத்தி பாதிப்பு: மாடுகளுக்கு பசுந்தீவனம் கிடைக்காததால், கடைகளில் தீவனம் வாங்கி கொடுக்கின்றனர். மழை காலங்களில் மாடுகளுக்கு இயற்கை தீவனங்களும், தண்ணீரும் நன்றாக கிடைக்கும். இதனால், பசு, எருமை மாடுகள் அதிக பால் கொடுக்கும். ஆனால், வெயில் காலத்தில் இயற்கை தீவனம், போதிய தண்ணீரும் கிடைக்காததால், பால் தருவது குறைவதாக கால்நடை வளர்ப்போர் தெரிவிக்கின்றனர்.ஆடுகள் விற்பனை: போதிய தீவனங்கள் கிடைக்காததால் ஆடுகளை விற்பனை செய்து வருகின்றனர். தீவனக் குறைவால் ஆடுகள் மெலிந்து எடை குறைந்தும் காணப்படுகிறது. இதனால், சீசன் நேரத்தில் நல்ல விலைக்கு விற்கும் ஆடுகளை தீவனங்கள் இல்லாமல், குறைந்த விலைக்கு விற்கின்றனர்.  …

Related posts

அரசின் நலத்திட்டங்கள் குறித்து பயனாளிகளிடம் வீடியோ காலில் கேட்டறிந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னையில் அதிகரிக்கும் தெருநாய் தொல்லை.. ஆண்டுக்கு 28,000 நாய்களுக்கு இனவிருத்தி கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்ய மாநகராட்சி நடவடிக்கை!!

84 நீர்நிலைகளில் படிந்துள்ள களிமண், வண்டல் மண்ணை விவசாயிகள் இலவசமாக எடுக்க அனுமதி: அரசிதழில் வெளியீடு