ஆண்டிபட்டி அருகே காட்டுப்பன்றியை வேட்டையாட நாட்டு வெடிகுண்டுகள் வைத்திருந்தவர்கள் மீது வழக்கு

 

ஆண்டிபட்டி, ஆக. 24: தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வனச்சரக பகுதிக்கு உட்பட்ட ஏத்தக்கோவில் பகுதியில், கடந்த வாரம் நாட்டு வெடி வைத்து காட்டுப்பன்றியை வேட்டையாடி அதை சமைத்ததாக ஆண்டிபட்டி வனத்துறையினர் ஏத்தக்கோவில் கிராமத்தை சேர்ந்த முனியப்பன், அழகநாதன், ராமர், அழகர் மற்றும் பாலக்கோம்பை பகுதியை சேர்ந்த குமார் ஆகிய 6 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 8 நாட்டு வெடிகளை கைப்பற்றினர்.

இவர்கள் மீது வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ஆண்டிபட்டி கோர்ட்டில் ஆர்டர் செய்து தேனி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் கைப்பற்றப்பட்ட நாட்டு வெடிகுண்டுகளால் மனித உயிருக்கு கேடு உள்ளதாக கூறி ஆண்டிப்பட்டி வனச்சரகர் அருள்குமார், நாட்டு வெடிகுண்டு வைத்திருந்த 6 பேர் மீது நடவடிக்கை எடுக்கும்படி ஆண்டிப்பட்டி போலீசில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் உயிருக்கு ஆபத்தான நாட்டு வெடிகுண்டுகளை வைத்திருந்த 6 பேரும் மீது ஆண்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

சாத்தூரில் இன்று மின்தடை

திமுக ஆலோசனை கூட்டம்

சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி