ஆண்டிபட்டியில் கையுறை அணியாமல் கழிவுநீர் வாறுகாலில் அடைப்பு நீக்கம்-தூய்மைப் பணியாளர்களுக்கு நோய் பரவும் அபாயம்

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி பேரூராட்சியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு வளர்ச்சி மற்றும் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள, பேரூராட்சி நிர்வாகம் சார்பில், அலுவலக பணியாளர்கள், குடிநீர் விநியோக பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், நிரந்தரம் மற்றும் தற்காலிகமாக பணிபுரிந்து வருகின்றனர். பேரூராட்சி பகுதிகளில் தினசரி கழிவுநீர் கால்வாய் தூர்வாறுதல், குடியிருப்பு பகுதிகளில் இருக்கும் குப்பைகளை சேகரிக்கும் பணி, தேங்கியுள்ள கழிவுநீர் கால்வாய்களை அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு சுகாதாரப் பணிகளை தூய்மைப் பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில், கொண்டமநாயக்கன்பட்டி, என்ஜிஓ நகரிலிருந்து வெளியேறும் கழிவுநீர், கொண்டமநாயக்கன்பட்டி டிஎஸ்பி அலுவலகம் அருகே, தேனி-மதுரை சாலையில் சிறிய பாலத்திற்கு அடியில் உள்ள கழிவுநீர் ஒடை வழியாக செல்கிறது. இந்த ஓடையில் குப்பைகள் சேர்ந்து அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், கழிவுநீர் சாலையில் ஓடியது. இதையடுத்து, பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் கழிவுநீர் ஓடையில் உள்ள கையுறை, காலில் உறை அணியாமல், பாதுகாப்பின்றி கழிவுநீரில், இறங்கி வேலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. இதனால், அவர்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பேரூராட்சி தூய்மை பணியாளர்களை பாதுகாப்பாக உறைகள் அணிந்து வேலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமுக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்….

Related posts

முன்னாள் முதல்வர் கலைஞரின் 6வது ஆண்டு நினைவு நாளையொட்டி ஆகஸ்ட் 7ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி

முன்னாள் முதல்வர் கலைஞரின் 6வது ஆண்டு நினைவு நாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அருவிகளுக்கு செல்ல, குளிக்க நாளை தடை