ஆண்களே… முதுகு பத்திரம்!

முதுகெலும்பு அழற்சியை ஸ்பாண்டிலிட்டிஸ் என்பார்கள். இது, வயதான காலத்தில் தாக்கும் ஒருவகை எலும்பு சம்பந்தப்பட்ட நோய். ஆனால் இன்று ஏராளமான இளம் வயதினர் இந்த நோயால் அதிகம் அவஸ்தைப்படுகின்றனர். நூற்றில் ஒருவர் நிச்சயமாக இந்நோயால் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக ஆண்கள்தான் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.என்னென்ன பாதிப்புகள் வரும்?* மூட்டு இணைப்புக்கள் கடுமையாக பாதிக்கப்படும்.* நெகிழ்வுத்தன்மை குறையும்.* தசைநார்கள் சேதமடையும்.* இயக்கத்தை இழக்கும் அபாயம்கூட ஏற்படலாம். ஆரம்பக் கால அறிகுறிகள் என்னென்ன?* இடுப்பு மூட்டுப் பகுதிகளில் தீவிரமானவலி * கழுத்து மற்றும் தோள்பட்டை விறைப்பு முதுகெலும்பு அழற்சி ஏற்பட என்னென்ன காரணம்?* உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறை. * போதிய ஓய்வின்றி உழைப்பது. * அத்தியாவசிய ஊட்டச்சத்து குறைபாடுகள். ;* உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது. * நீண்ட நேரம் டி.வி மற்றும் மற்ற எலக்ட்ரானிக் பொருட்களைப் பயன்படுத்துவது. * சரியான நேரத்தில் உணவு உண்ணாமல் இருப்பது.* உடல் பருமன். * புகைப்பிடிப்பது.* மது அருந்துவது. இதற்கு என்ன சிகிச்சை?ஸ்பாண்டிலிட்டிஸ் பிரச்சனைக்கு அலோபதி, ஹோமியோபதி, சித்த, ஆயுர்வேதம் போன்ற பலவிதமான சிகிச்சைமுறைகள் உள்ளன. ஒருவரின் பாதிப்பின் தீவிரத்தன்மைக்கு ஏற்பவும் உடல் அமைப்புக்கு ஏற்பவும் ஏதேனும் ஒரு வழிமுறையில் சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம்.தொகுப்பு: இளங்கோ கிருஷ்ணன்

Related posts

இதயத்தைக் காக்கும் சைக்கிளிங்!

ப்ளுபெர்ரி பழத்தின் நன்மைகள்!

மன அழுத்தம் நீங்க சில எளிய வழிகள்!