ஆடை ஏற்றுமதி குறித்து புகார் தெரிவிக்கலாம்

 

திருப்பூர், ஜன. 20: இந்தியா சுமார் 16 பில்லியன் அளவிற்கு ஆயத்த ஆடைகளை ஏற்றுமதி செய்து வருகிறது. இதனை உயர்த்தும் வகையில் ஒன்றிய ஜவுளித்துறை அமைச்சகம் ஏராளமான இலவச புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பல்வேறு நாடுகளுடன் மேற்கொண்டு வருகிறது. அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் மற்றும் அதன் நடைமுறை சிக்கல்கள் ஏதேனும் இருந்தால் ஏற்றுமதியாளர்கள் (ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழகம்) ஏஇபிசியிடம் தெரிவித்தால், அதனை மத்திய ஜவுளி அமைச்சகத்தின் கவனத்திற்கு கொண்டு தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

குறிப்பாக ஏற்றுமதி செய்யும்போது ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்கள் எதிர்கொள்ளும் வர்த்தகத்திற்கான வரி அல்லாத தடைச்சிக்கல்கள், ஆவணம், சான்றிதழ், ரம், ரசாயனம், சாயங்கள், வடிவமைப்பு, லேபிளிங், வினியோக கட்டுப்பாடு தொடர்பான தகவல்களை மத்திய அமைச்சகம் கோருகிறது. எனவே இது குறித்து ஏற்றுமதியாளர்கள் புகார்கள் மற்றும் கருத்துகள் இருந்தால் dsg@aepcindia.com, aepctirupur@aepcindia.com என்ற மின்னஞ்சல் என்ற மின்னஞ்சல் முகவரியில் தெரிவிக்கலாம் என ஏஇபிசி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு