ஆடு திருடிய சிறுவன் உள்பட 2 பேர் கைது

 

புதுக்கோட்டை, ஆக.25: புதுக்கோட்டை மாவட்டம் இளைய வயலை சேர்ந்தவர் சுமதி (46). இவரது வீட்டில் கட்டப்பட்ட 6 ஆடுகள் காணாமல் போய்விட்டது. இது குறித்து கீரனூர் போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து தொடர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையில் நடத்தினர். இந்நிலையில் இந்த திருட்டில் தொடர்புடைய கீரனூர் எழில் நகரை சேர்ந்த யோஸ்வா பிரின்ஸ் (26), கீரனூர் பகுதியை சேர்ந்த 18 வயது சிறுவன் ஆகிய இருவரையும் பிடித்து விசாரணை செய்துள்ளனர். விசாரணையில் அவர்கள் ஆடு திருடியதை ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து இவர்களிடம் இருந்த ஆடுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு