ஆடி மாத பிறப்பையொட்டி தேங்காய் சுடும் நோன்பு அழிஞ்சி குச்சி விற்பனை விறுவிறுப்பு

ஈரோடு, ஜூலை 16: தமிழ் மாதம் ஆடி 1ஐ வரவேற்கும் விதமாக தமிழகத்தில் கொங்கு மண்டலம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள மக்கள் தேங்காயை தீயிலிட்டு இறைவனுக்கு படைத்து வழிபடுவது வழக்கம். அதன்படி, நாளை (17ம் தேதி) ஆடி மாத பிறப்பையொட்டி, தேங்காய் சுடும் அழிஞ்சி குச்சிகள் விற்பனைக்கு குவிக்கப்பட்டிருந்தது. இதில், ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் உள்ள நேதாஜி தினசரி மார்க்கெட், ஆர்.கே.வி. சாலை, மணிக்கூண்டு, பெரியமாரியம்மன் கோயில் பகுதிகளில் அழிஞ்சி குச்சிகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில், ஒரு அழிஞ்சி குச்சி ரூ.10 முதல் ரூ.15 வரை அளவிற்கு தகுந்தாற்போல விற்பனை செய்யப்பட்டது. நாளை (17ம் தேதி) மாலை ஆடி பிறப்பை வரவேற்கும் விதமாக தேங்காயில் மஞ்சள் பூசி, தேங்காய்க்குள் எள், கடலை, வெல்லம், அவல் உள்ளிட்ட பல வகை பொருட்களை இட்டு, அந்த தேங்காய்க்குள் அழிஞ்சி குச்சியினை பொருத்தி தீயில் சுட்டு, அதனை இறைவனுக்கு படையலிட்டு வழிபடுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

அலங்காநல்லூர் அருகே மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

சமயநல்லூர் அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் பலி

விபத்தின்றி பணியாற்றிய டிரைவருக்கு தங்க பதக்கம்