ஆடி மாத தேய்பிறை அஷ்டமி: காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம்

 

வேலாயுதம்பாளையம், ஆக. 9: ஆடி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு தவுட்டுப்பாளையம் அருகே நன்செய் புகழூரில் உள்ள பாகவல்லி அம்பிகை சமேத மேகபாலீஸ்வரர் கோயிலில் காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில், பைரவருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி, மஞ்சள் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் கால பைரவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல் புன்னம்சத்திரம் அருகே உள்ள புன்னைவனநாதர் உடனுறை புன்னைவன நாயகி கோயில், திருக்காடுதுறை மாதேஸ்வரி அம்பிகை உடனுறை மாதேஸ்வரன் கோயில், குந்தாணிபாளையம் நத்தமேடு ஈஸ்வரன் கோயில், நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிவன் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்