ஆடிப்பெருக்கை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு

 

திருவாடானை, ஆக.5: திருவாடானை அருகே குருப்புளி கிராமத்தில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில் ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கலந்து கொண்ட 14 காளைகளுக்கு 20 நிமிட நேரம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு காளைகள் களம் இறக்கப்பட்டன. அந்த காளைகளை அடக்குவதற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த மாடுபிடி வீரர்களில் ஒரு காளையை அடக்க 9 வீரர்கள் வீதம் 14 அணிகளாக களம் இறக்கப்பட்டனர்.

களத்தில் காளைகளை அடக்கினால் மாடுபிடி வீரர்கள் வெற்றி பெற்றதாகவும், நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் காளைகளை அடக்கத் தவறினால் பிடிபடாத காளைகள் வெற்றி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டு இந்த வடமாடு மஞ்சுவிரட்டு விழா விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் பரிசு தொகையும், பரிசு பொருட்களும் வழங்கப்பட்டது.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி