ஆடிப்பெருக்கை முன்னிட்டு விலை எகிறியது திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் மல்லிகை ₹1000க்கு விற்பனை

திண்டுக்கல். ஆக. 3: ஆடிப்பெருக்கை முன்னிட்டு திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ ரூ.1000க்கு விற்பனையானது. திண்டுக்கல் அண்ணா பூ மார்க்கெட்டில் பூக்கள் விற்பனைக்காக திண்டுக்கல் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படுகிறது. இங்கிருந்து ஈரோடு, திருச்சி, சேலம், சென்னை, கேரளா உள்ளிட்ட பகுதிகளுக்கு பூக்கள் விற்பனைக்காக ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில் ஆடிப்பெருக்கு மற்றும் வரத்து குறைவு காரணமாக பூக்களின் விலை அதிகரித்துள்ளது. திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 600 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ மல்லிகை பூ நேற்று 900 முதல் ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது.
இதேபோல் ஒரு கிலோ சம்பங்கி பூ ரூ.250க்கும் ரோஜாப்பூ ரூ.150க்கும், முல்லைப் பூ ரூ.450க்கும், ஜாதிபூ ரூ.350க்கும், கனகாம்பரம் ரூ400க்கும், கோழிகொண்டை ரூ.80க்கும்., செண்டுமல்லி ரூ.80க்கும், செவ்வந்தி ரூ.200க்கும், வாடாமல்லி ரூ.25க்கும், மரிக்கொழுந்து ரூ.100க்கும், அரளி பூ ரூ.150க்கும், காக்கரட்டான் ரூ.250 க்கும், தாமரைப்பூ ஒன்று ரூ.7க்கும் விற்பனையானது.

Related posts

விடுபட்ட பகுதிகளில் விரைவில் பாதாளசாக்கடை திட்டம்: சேர்மன் முத்துத்துரை தகவல்

கண்ணங்குடி விவசாயிகளுக்கு பசுந்தாள் உர விதைகள் விநியோகம்

தண்டவாளத்தை கடக்க முடியாமல் தடுமாறும் வாகன ஓட்டிகள்