ஆடிப்பெருக்கு விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர் தம்பதிகள் புது தாலி அணிந்து வழிபட்டனர் ெசங்கம் நீப்பத்துறை தென்பெண்ணை ஆற்றின் கரையோரம்

செங்கம், ஆக. 4: நீப்பத்துறை தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் ஆடிப்பெருக்கு விழா நேற்று கோலாகலமாக நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனிதநீராடினர். தம்பதிகள் புது தாலி அணிந்து வழிபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த நீப்பத்துறை தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் உள்ள பிரசன்னா வெங்கட்ரமண பெருமாள் கோயில் சென்னியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் நேற்று ஆடிப்பெருக்கு விழாவையொட்டி வண்ண விளக்குகளால் கோயில் முழுவதும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. வாணவேடிக்கை சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. ஆடிப்பெருக்கு விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர்.

மேலும், திருமணமான தம்பதிகள் புனித நீராடியும், புது தாலி அணிந்தும் வழிபட்டனர். விரதம் இருந்த பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் பொங்கல் வைத்தும் ஆடு, கோழி பலியிட்டு மொட்டை அடித்தும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களுக்கு உணவு சமைத்து விருந்து பரிமாறினர். ஆடிப்பெருக்கு விழாவையொட்டி வேலூர், திருவண்ணாமலை, சேலம் என வெளி மாநில, மாவட்டங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வணங்கி வழிபட்டனர். பக்தர்கள் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டது. கோயில் வளாகம் அருகாமையில் மேல் பள்ளிப்பட்டு வட்டார மருத்துவ அலுவலர் சிலம்பரசன் தலைமையில் மருத்துவக் குழுவினர் முகாம் அமைத்து பக்தர்களுக்கு அவசர சிகிச்சைகள் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. டிஎஸ்பி தேன்மொழி வெற்றிவேல் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Related posts

சாத்தூரில் இன்று மின்தடை

திமுக ஆலோசனை கூட்டம்

சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி