ஆசிரியர் கொலை வழக்கில் குண்டாஸில் 2 பேர் கைது

 

ராமநாதபுரம், ஆக.21: கமுதி செட்டியார் பஜாரை சேர்ந்த முருகேசன் மகன் கண்ணன்(50). கமுதி அருகே கே.பாப்பாங்குளம் ஊராட்சி பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவரை, கடந்த ஜூன் மாதம் மர்ம கும்பல் கொலை செய்தது. கமுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து கே.வேப்பங்குளம் கிராமத்தைச் சேர்ந்த முத்துராமலிங்கம் மகன் அரியப்பன்(40), இவரது சகோதரர் முருகன்(30), முத்தாலங்குளத்தை சேர்ந்த வினோத்குமார்(25) மற்றும் இலந்தைக்குளம் பாலமுருகன்(22) ஆகியோரை கைது செய்து ராமநாதபுரம் சிறையில் அடைத்தனர். இக்கொலை வழக்கில் அரியப்பன் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் முருகன்,வினோத்குமார் ஆகிய இருவரும் எஸ்.பி.சந்தீஷ் பரிந்துரையின் பெயரில் குண்டர் சட்டத்தில் கைது செய்து மதுரை மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்