ஆசிரியர், அரசு ஊழியர்கள் 615 பேர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் ஜாக்டோ ஜியோ சார்பில், நடந்த சாலை மறியல் போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் 615 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அண்ணா சிலை எதிரில், முதல்வரின் தேர்தல் கால வாக்குறுதியான சிபிஎஸ் திட்டம் ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி ஜாக்டோ ஜியோ சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பார்கள் சந்திரன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலைமை வகித்தனர். மாநில ஒருங்கிணைப்பாளர் தியோடர் ராபின்சன் மறியல் போராட்டத்தை துவக்கி வைத்தார். உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் நாராயணன், மாநில கொள்கைப் பரப்பு செயலாளர் மாதப்பன், பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகம் கல்யாணசுந்தரம், அரசு ஊழியர் சங்க மாவட்ட மகளிர் துணை குழு அமைப்பாளர் ஜெகதாம்பிகா, பொது சுகாதாராத்துறை அலுவலர் சங்க மாநில துணைத்தலைவர் தினேஷ், சமூக நலத்துறை காந்திமதி, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட செயலாளர் மாரப்பன் ஆகியோர் கோரிக்கை குறித்து பேசினர்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை