ஆசிரியர்களுக்கு அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு: பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் முதல் முறையாக தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு, எண்ணறிவு சோதனை செய்யும் தேர்வு நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வில் ஆசிரியர்கள் கட்டாயம் தேர்ச்சி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். தேர்வில் தேர்ச்சி பெறாமல் போனால், அவர்கள் மீண்டும் தேர்வு எழுதி சான்று பெற வேண்டும் என்ற நடைமுறையை பள்ளிக் கல்வித்துறை கொண்டு வருகிறது. இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் என்ற திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் 12 கட்டகங்கள் அடங்கிய புத்தகங்களை தயார் செய்துள்ளது. அதில் தெ ரிவிக்கப்பட்டுள்ள பயிற்சிகளை முடித்த பிறகு ஆசிரியர்கள் மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்படுவார்கள். அதில் நிர்ணயிக்கப்பட்ட மதிப்பெண்களை பெறும் ஆசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். உரிய மதிப்பெண்ணை பெறாதவர்கள் மீண்டும் பயிற்சி பெற வேண்டும். மேற்கண்ட எண்ணும் எழுத்தும் பயிற்சிகள் ஆன்லைன் மூலம் இன்று தொடங்கி மார்ச் 25ம் தேதி வரை நடக்கும். இந்த பயிற்சியில் கலந்து கொள்ளும் ஆசிரியர்கள் இணைய தளத்தின் மூலம் தொடர்பு கொண்டு பயிற்சியில் பங்கேற்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள 37 மாவட்டங்களிலும் உள்ள அரசுப் பள்ளிகளில் 80 ஆயிரத்து 85 ஆசிரியர்கள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் 28ஆயிரத்து 190 ஆசிரியர்கள்  என 1 லட்சத்து 8 ஆயிரத்து 275 ஆசிரியர்கள் இந்த பயிற்சியில் பங்கேற்க உள்ளனர். …

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை