ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பில், ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், மாவட்ட தொடர்பு அலுவலர்கள் மற்றும் உயர்கல்வி வழிகாட்டுதல் ஆசிரியர் பயிற்றுநர்கள் ஆகியோருக்கான பயிற்சி முகாம், மாவட்ட திட்ட அலுவலகத்தில் நடந்தது. இதில், மாவட்ட அளவில் கல்லூரி என்எஸ்எஸ் மாணவர்களை அரசு பள்ளியுடன் ஒருங்கிணைத்தல் சார்ந்த பயிற்சி முகாம் நடந்தது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி தொடங்கி வைத்தார். உதவி திட்ட அலுவலர் பாஸ்கரன் வரவேற்றார். கல்லூரி என்எஸ்எஸ் மாணவர்களை அரசு பள்ளிகளுடன் ஒருங்கிணைத்து ‘நான் முதல்வன்’ இணையதளத்தில் பதிவு செய்வது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள், எவ்வாறு தங்கள் விவரங்களை ‘நான் முதல்வன்’ இணையதளத்தில் பதிவு செய்வது, அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உயர்கல்வி வழிகாட்டுதல் சார்ந்து வரும் நிகழ்வுகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டது.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்