ஆசிய கோப்பை டி20 இந்தியா – ஹாங்காங் இன்று மோதல்

துபாய்: ஆசிய கோப்பை டி20 தொடரில் இந்தியா தனது 2வது லீக் ஆட்டத்தில், அறிமுக அணியான ஹாங்காங்குடன் இன்று மோதுகிறது. ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா, முதல் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியது. கடைசி ஓவர் வரை மிகவும் விறுவிறுப்பாக அமைந்த அந்த போட்டியில், ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா சிறப்பாக செயல்பட்டு வெற்றியை வசப்படுத்த உதவினார். ஏ பிரிவில் 2 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ள இந்தியா, இன்று நடைபெறும் 2வது ஆட்டத்தில் ஹாங்காங் அணியை எதிர்கொள்கிறது. அனுபவ வீரர்களை கொண்ட இந்திய அணிக்கு கற்றுக்குட்டியான ஹாங்காங்கை வீழத்துவது மிக எளிதாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதற்கு முன் இரு அணிகளும் டி20ல் மோதியதில்லை. ஏற்கனவே விளையாடிய 2 ஒருநாள் போட்டிகளிலும் இந்தியாவே வென்றுள்ளது. ரோகித் தலைமையிலான இந்திய அணியில் மாற்றத்துக்கான வாய்ப்பு குறைவு. நிசகத் கான் தலைமையிலான ஹாங்காங் அணியில் இந்திய, பாகிஸ்தான் வம்சாவழியினர்தான் அதிகம் உள்ளனர்.  அதனால் அவர்கள் கவுரவமான தோல்விக்கு முனைப்பு காட்டுவார்கள் என எதிர்பார்க்கலாம். இதுவரை: 2008 மற்றும்  2018ல் நடந்த ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் (ஒருநாள்) இந்திய அணி முறையே  256 ரன் வித்தியாசத்திலும், 26 ரன் வித்தியாசத்திலும்  ஹாங்காங்கை வீழ்த்தி உள்ளது….

Related posts

மாநில ஜூனியர் தடகள போட்டி நாளை தொடக்கம்

டி20 உலக கோப்பை வென்று தாயகம் திரும்பிய இந்திய வீரர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு..!

விம்பிள்டன் டென்னிஸ் 2வது சுற்றில் மாயா