ஆக.8ல் மாநகராட்சி வடக்கு மண்டல குறைதீர் முகாம்

மதுரை, ஆக. 6: மதுரை மாநகராட்சி வடக்கு மண்டல பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் ஆக.8ம் தேதி (செவ்வாய்க்கிழமை) ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள வடக்கு மண்டல அலுவலகத்தில் காலை 10 மணி முதல் 12.30 மணி வரை நடைபெறுகிறது. வார்டு எண்.1 விளாங்குடி, வார்டு2 கரிசல்குளம், 15 ஜவஹர்புரம், 20 விசாலாட்சி நகர், 21 அருள்தாஸ்புரம், 22 தத்தனேரி மெயின் ரோடு, 23 அய்யனார் கோவில், 24 மீனாட்சிபுரம், 25 பீ.பீ.குளம், 26 நரிமேடு, 27 அகிம்சாபுரம், 28 கோரிப்பாளையம், 31 தல்லாகுளம், 32 சின்னசொக்கிக்குளம், 33 கே.கே.நகர், 34 அண்ணா நகர், 35 சாத்தமங்கலம், 63 பாத்திமா நகர், 64 பெத்தானியாபுரம், 65 பி.பி.சாவடி, 66 கோச்சடை ஆகிய வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு