ஆக.12 முதல் 16 வரை பரசுராம் எக்ஸ்பிரஸ் திருவனந்தபுரத்துடன் நிறுத்தம் தெற்கு ரயில்வே தகவல்

நாகர்கோவில், ஆக.6: தெற்கு ரயில்வே திருவனந்தபுரம் கோட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: ரயில் எண்: 16649 மங்களூர் சென்ட்ரல்- கன்னியாகுமரி பரசுராம் எக்ஸ்பிரஸ் ரயில் ஆகஸ்ட் 5 முதல் 8 வரை திருவனந்தபுரம் – கன்னியாகுமரி ரயில் நிலையங்கள் இடையே இயக்கப்படாது என்ற அறிவிப்பு ரத்து செய்யப்பட்டு வழக்கமான நேரத்தில் இயக்கப்படுகிறது. மேலும் பாலம் பராமரிப்பு பணிகளுக்காக ஆகஸ்ட் 12 முதல் 15ம் தேதி வரை திருவனந்தபுரம் சென்ட்ரல் உடன் நிறுத்தப்படும். மேலும் திருவனந்தபுரம் சென்டரல் – கன்னியாகுமரி இடையே இயக்கப்படாது. ரயில் எண் 16650 – கன்னியாகுமரி – மங்களூரு சென்ட்ரல் பரசுராம் எக்ஸ்பிரஸ் ஆகஸ்ட் 6 முதல் 9ம் தேதி வரை கன்னியாகுமரி திருவனந்தபுரம் இடையே இயக்கப்படாது என்ற அறிவிப்பு திரும்ப பெறப்படுகிறது. மேலும் ஆகஸ்ட் 13 முதல் 16 வரை கன்னியாகுமரிக்கு பதிலாக திருவனந்தபுரத்தில் இருந்து இயக்கப்படும்.

ரயில் எண் 16128 குருவாயூர் – சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் குருவாயூரில் இருந்து 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25 மற்றும் 26 தேதிகளில் இரவு 11.15 மணிக்கு புறப்படுவது கோட்டயம் வழியாக இயக்கப்படும். மேலும் எர்ணாகுளம் ஜங்ஷன், சேர்த்தலா, ஆலப்புழா நிறுத்தங்கள் செல்லாது. மேலும் கோட்டயம், சங்கனாச்சேரி, திருவல்லா, செங்கன்னூர் நிறுத்தங்கள் கூடுதலாக அனுமதிக்கப்பட்டுள்ளன.
மேலும் இந்த ரயில் ஆகஸ்ட் 4, 5, 8, 10 தேதிகளில் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை மற்றும் திருச்சி வழியாக இயக்கப்படும்.

மதுரை, சோழவந்தான், கொடை ரோடு, திண்டுக்கல், மணப்பாறை நிறுத்தங்கள் செல்லாது. மானாமதுரை, காரைக்குடியைில் கூடுதல் நிறுத்தங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. ரயில் எண் 16127 சென்னை எழும்பூர்- குருவாயூர் எக்ஸ்பிரஸ் சென்னை எழும்பூரில் இருந்து ஆகஸ்ட் 8ம் தேதி காலை 9.45 மணிக்கு புறப்படுவது புதுக்கோட்டை, மானாமதுரை, விருதுநகர் வழியாக இயக்கப்படும். மணப்பாறை, திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, சோழவந்தான், கூடல் நகர் மற்றும் மதுரை நிறுத்தங்கள் செல்லாது. காரைக்குடி, மானாமதுரையில் கூடுதல் நிறுத்தங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.

Related posts

அருமனை அருகே சோகம்; நண்பன் தூக்கிட்டு தற்கொலை அதிர்ச்சியில் தொழிலாளி சாவு

சதுர்த்தி விழா இன்று கொண்டாட்டம் விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்க தொடங்கினர்: 13ம் தேதி முதல் நீர் நிலைகளில் கரைப்பு

விஜய் வசந்த் எம்.பி. விநாயகர் சதுர்த்தி வாழ்த்து