ஆக்கிரமிப்புகள் அதிரடி அகற்றம்

ஸ்ரீபெரும்புதூர்:  நீர்நிலை பகுதியில் கட்டப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகின்றன. ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரம் பகுதியில் அமைந்த விநாயகர் கோயில் குளம் உள்ளது. இந்த குளக்கரையை 30க்கும் மேற்பட்ட வீடுகள், 20க்கும் மேற்பட்ட கடைகள் கடந்த பல ஆண்டுகளாக ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. அங்குள்ள குடியிருப்புகள், கடைகளுக்கு வருவாய் துறை அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன் நோட்டீஸ் வழங்கினர். அப்பகுதி மக்கள், தங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதற்கு அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.இந்நிலையில் நேற்று காலை, மேற்கண்ட பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் அங்கு சென்றனர். இதை பார்த்த பொதுமக்கள், தங்களுக்கு மாற்று இடம் வழங்காமல் வீடுகளை இடிப்பதை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது குடியிருப்புவாசிகளுக்கு மாற்று இடம் வழங்காமலும், கால அவகாசம் கொடுக்காமல் அகற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கோஷமிட்டனர். பின்னர், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட 40க்கும் மேற்பட்டோரை கைது செய்து, அதே பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். செங்கல்பட்டு: செங்கல்பட்டு நகராட்சி பகுதியில், ஏராளமான தற்காலிக கடைகள் உள்ளன. இந்த கடைகளால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பொதுமக்கள் சிரமம் அடைந்தனர். இதையடுத்து, அங்குள்ள கடைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள், தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். அதன்பேரில், தற்காலிக கடைகளை  அகற்ற வேண்டும் என  கலெக்டர் ராகுல்நாத், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.அதன்படி, செங்கல்பட்டு நகராட்சியில் மேட்டுத் தெரு, ராஜாஜி தெரு, பஜார் தெரு, சின்னம்மன் கோயில் தெரு ஆகிய பகுதிகளில் உள்ள சுமார் 100 தற்காலிக கடைகளை நகராட்சி ஆணையர் ராஜலட்சுமி தலைமையில், நகரமைப்பு ஆய்வாளர்கள் செந்தில்குமார், செழியன், கணேசமூர்த்தி, சுகாதார ஆய்வாளர்கள் பாஸ்கர், பால் டேவிஸ்   ஆகியோர் நேற்று ஊழியர்கள் மூலம் அகற்றினர். மேலும், கடையின் உரிமையாளர்களுக்கு, நகராட்சி சாலையில் ஆக்கிரமிப்பு செய்தார், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்….

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை