ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கும்மிடிப்பூண்டி: பெத்திகுப்பம் காலனி பகுதியில் சாலை ஓர நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக வட்டாட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் ஊராட்சி மன்ற தலைவர் ஜீவா செல்வம் அளித்த புகாரின் அடிப்படையில் அப்பகுதி முறையாக அளவீடு செய்யப்பட்டது. தொடர்ந்து நேற்று சாலை ஆக்கிரமிப்புகளை வருவாய் துறையினர் காவல்துறையினரின் உதவியுடன் அரசு நிலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். அப்போது, கிராம நிர்வாக உதவியாளர் திருப்பதியை, அதே பகுதியை சேர்ந்த நாகஜோதி(29) என்பவர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் போலீசார் அவரை கைது செய்தனர். இதற்கிடையில், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதை கண்டித்து அதே பகுதியை சேர்ந்த மணியம்மாள்(50) என்பவர் தீக்குளிக்க முயன்றார். இதனால் அப்பகுதியில் சில மணி நேரம் பரபரப்பான சூழல் காணப்பட்டது. இறுதியில் பொக்லைன் இயந்திரம் மூலம் 12 சென்ட் அரசு நிலத்தை மீட்டனர். இதன் மதிப்பு ரூ.10 லட்சம்….

Related posts

மதுரை, கோவையில் அமைய உள்ள மெட்ரோ ரயில் திட்டம் குறித்து ஆசிய முதலீட்டு வங்கி பிரதிநிதிகள் நாளை ஆய்வு..!!

சிறை அலுவலர்கள், உதவி சிறை அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

ஜெட் விமான சோதனை ஓட்டம்: மயிலாடுதுறையில் நில அதிர்வால் பொதுமக்கள் அதிர்ச்சி