ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக அதிமுக செயல்படும்: எடப்பாடி பழனிசாமி பேட்டி

இடைப்பாடி: சேலம் மாவட்டம், இடைப்பாடி அடுத்த கொங்கணாபுரம் ஒன்றியம், வெள்ளாளபுரத்தில் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மழை நீர் சூழ்ந்த பகுதிகளில் நேரில் பார்த்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: டெல்டா மாவட்டங்களான கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் கனமழையின் காரணமாக நெல் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. நானும். அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வமும் நாளை (இன்று) அங்கு சென்று விவசாயிகளை சந்தித்து ஆறுதல் கூற இருக்கிறோம்.  மாநில அரசு, மழை வெள்ளம் பாதித்த பகுதிகளை கண்டறிந்து, நிவாரண நிதி வேண்டி ஒன்றிய அரசுக்கு கடிதம் அனுப்பினால், அதிமுக சார்பாக நாங்களும் நிவாரண நிதியை விடுவிக்க ஒன்றிய அரசிடம் வலியுறுத்தி கேட்டுக் கொள்வோம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விசாரணை கமிஷன் போடுவதாக கூறுகிறார். முறைகேடுகள் எதுவும் அதிமுக ஆட்சியில் நடைபெறவில்லை. விசாரணை கமிஷன் போடுவதைப்பற்றி நாங்கள் கவலைப்படவும் இல்லை. அதிமுக ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக  செயல்படும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்….

Related posts

தன்னை சந்திக்க சென்னைக்கு வர வேண்டாம்: உதயநிதி

ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சிதாராமன் ராஜினாமா செய்ய வேண்டும்: காங். மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்

த.வெ.க. கொடி விவகாரத்தில் தலையிட முடியாது: தேர்தல் ஆணையம்