ஆகாயத் தாமரையால் தூர்ந்துள்ள புழல் ஏரி: மழைநீர் சேமிப்பதில் சிக்கல்

புழல்: சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கும் நீர்நிலைகளில் ஒன்றான புழல் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மில்லியன் கனஅடி. தற்போதைய தண்ணீர் இருப்பு 3,048 மில்லியன் கன அடியாக உள்ளது. 307 கனஅடி வினாடிக்கு வந்து கொண்டிருக்கிறது. சென்னை மக்கள் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 214 கன அடி நீர் அனுப்பப்பட்டு வருகிறது. கோடை காலத்திலும் இந்த ஏரியில் அதிகப்படியான தண்ணீர் நிரம்பி கடல் போல் காட்சியளிக்கிறது. இந்நிலையில், இந்த ஏரியில் ஆகாய தாமரைகள் படர்ந்து, தூர்ந்துள்ளதால், மழைக்காலங்களில் போதிய தண்ணீர் சேமிக்க முடியாத நிலை உள்ளதுடன், குடிநீர் மாசடையும் அவலம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் உடனடியாக புழல் ஏரியில் ஆய்வு செய்து, ஆகாயத் தாமரைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.  இதேபோல், சோழவரம் ஏரியின் உபரி நீர் புழல் ஏரியில் கலக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கால்வாயில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆகாயத் தாமரைகள் வளர்ந்து தூர்ந்துள்ளது. இதையும் அகற்றி, கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்….

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு