ஆகஸ்டில் 56.66 லட்சம் பேர் பயணம்

சென்னை: சென்னை மெட்ரோ ரயிலில் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 56.66 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரயில் பயணிகளுக்கும் பாதுகாப்பான போக்குவரத்து வசதியை அளித்து வருகிறது. அந்த வகையில் கடந்த ஆக.1ம் தேதி முதல் 31ம் தேதி வரை மொத்தம் 56,66,231 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணித்து உள்ளனர். அதிகபட்சமாக கடந்த 29ம் தேதி 2,20,898 பயணிகள் மெட்ரோ ரயிலில் பயணம் செய்தனர். மேலும், ஜூலை மாதத்தை காட்டிலும் ஆகஸ்ட் மாதத்தில் 3,48,572 பயணிகள் அதிகமாக பயணம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் கியூஆர் குறியீடு பயணச்சீட்டு முறையை பயன்படுத்தி 17,95,601 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். மேலும், பயண அட்டை பயணச்சீட்டு முறையை பயன்படுத்தி 34,42,151 பயணிகள் பயணம் செய்துள்ளனர். மெட்ரோ ரயில்களில் கியூஆர் குறியீடு பயணச்சீட்டு மற்றும் பயண அட்டைகளை பயன்படுத்தி பயணிக்கும் பயணிகளுக்கு 20% கட்டண தள்ளுபடி வழங்கப்படுகிறது. …

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்