அஷ்டவாராகி அம்மன் கோயிலில் தேய்பிறை பஞ்சமி சிறப்பு பூஜை

காரிமங்கலம், ஜூன் 9: காரிமங்கலம் அருகே கேரகோடஅள்ளியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள அஷ்ட வாராஹி அம்மன் கோயிலில் தேய்பிறை பஞ்சமி சிறப்பு பூஜைகள் நடந்தது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து தீபாராதனை நடந்தது. இதில், சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு, தேங்காயில் தீபம் ஏற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர். அனைவருக்கும் கோயில் நிர்வாகம் சார்பில் வளையல், குங்குமம் மற்றும் பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பள்ளி தலைவர் அன்பழகன் எம்எல்ஏ., தாளாளர் மல்லிகா அன்பழகன், நிர்வாக இயக்குனர் வித்யா ரவிசங்கர், இயக்குனர்கள் டாக்டர் சந்திரமோகன், சசிமோகன், சரவணகுமார், கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குனர் ரவிசங்கர், நிர்வாக அலுவலர் தனபால், அர்ச்சகர் நீலகண்ட சாஸ்திரி உள்ளிட்டோர் செய்திருந்தனர்

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு