அவிநாசி கோவிலில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற அவிநாசி பதிகம் 10 ஆயிரத்து 8 முறை பாராயணம்

 

அவிநாசி, ஜூன் 12: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் வளாகத்தில் நேற்று சிறப்பு வழிபாடும், அவிநாசியில் சுந்தரமூர்த்தி நாயனார் அருளிய தேவாரம், அவிநாசி பதிகத்தை 10 ஆயிரத்து 8 முறை பாராயணம் செய்யும் நிகழ்ச்சியும் நேற்று நடைபெற்றது. இதில் சிவபக்தர்களும், சிவனடியார்களும் பங்கேற்று அனைத்துவித இன்னல்கள் நீங்கவும், விரைவில் அவிநாசி கோவிலில் கும்பாபிஷக விழா சிறப்பாக நடைபெற அருள் புரியவும் பிரார்த்தனை செய்து, ‘அவிநாசிபதிகம்’ பாராயணம் செய்தனர்.

முன்னதாக கருணாம்பிகையம்மனுக்கும் அவிநாசியப்பருக்கும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதில், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் சிவாச்சாரியார் ஆரூர் சுப்பிரமணியம், ஓதுவார்கள், சிவன்மலை சந்திரசேகரன் பழனி விக்னேஷ், அமுத கணேசன், தாரமங்கலம் முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட சிவ பக்தர்களும், சிவனடியார்களும் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்