அவிநாசி அருகே தொல். திருமாவளவன் பிறந்த நாள் விழா

அவிநாசி, ஆக.20: விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல். திருமாவளவன் எம்பி.யின் 61-ம் ஆண்டு பிறந்த நாள் விழா, திருப்பூர் மாநகர மாவட்டம் செயலாளர் ஏபிஆர்.மூர்த்தி வழிகாட்டுதலின் பேரில், பெருமாநல்லூர் நால்ரோட்டில், நேற்று கொண்டாடப்பட்டது.

பெருமாநல்லூர் நால் ரோட்டில் விசிக கொடியேற்றிவைத்து, பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். விழாவுக்கு திருப்பூர் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் பழக்கடை குமார் தலைமை தாங்கினார். விசிக மாநில நிர்வாகி தொண்டைமான் விசிக கொடிஏற்றி வைத்து அனைவருக்கும் இனிப்புகளை வழங்கினார். மூத்த நிர்வாகி வெங்கடச்சலம். ஒர்க்ஸ்ஷாப் செந்தில், சதீஷ், பொங்குபளையம் சத்தியமூர்த்தி. சொட்டமேடு சுந்தரம் மற்றும் விசிக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Related posts

நண்பரை குத்தி கொல்ல முயற்சி வாலிபருக்கு 10 ஆண்டு சிறை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மதுபாட்டில் வைத்திருந்த 2 பேர் கைது

சாலையோரம் குவிந்து கிடந்த மாணவர்களின் சீருடைகள்: போலீசார் விசாரணை