அழிஞ்சமங்கலம் அரசு ஆரம்பப் பள்ளியில் மேலாண்மைகுழு கூட்டம்

நாகப்பட்டினம், ஏப்.13: நாகப்பட்டினம் அருகே அழிஞ்சமங்கலம் அரசு ஆரம்பப் பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம் நடந்தது. பள்ளி மேலாண்மை குழு தலைவர் ராஜதிலகம் தலைமை வகித்தார். ஆசிரியர் அன்புச்செல்வன் வரவேற்றார். தலைமை ஆசிரியர் சித்ரா தீர்மானங்களை வாசித்தார். கல்வியாளர் முத்துலட்சுமி மாணவர்கள் கல்விநலன் கருதி வரும் கல்வியாண்டில் சேர்க்கையை அதிகரிக்க எடுக்கும் வேண்டிய வழிமுறைகள் குறித்து பேசினார். இல்லம்தேடி கல்வியாளர்கள் நிவேதனா, வைஷ்ணவி, மதிமொழி ஆகியோர் இல்லம்தேடி கல்வியின் சிறப்புகள் குறித்து பேசினர். மேலாண்மைகுழு உறுப்பினர்களுக்கு போட்டிகள் வைக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. ஆசிரியர் ஆனந்தராஜ் நன்றி கூறினார்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்