அழகப்பபுரம் புனித அந்தோனியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது திரளானோர் பங்கேற்பு

அஞ்சுகிராமம், ஜூன் 6: அழகப்பபுரம் புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. நேற்று காலை 5 மணி திருப்பலியை பங்கின் ஆசிரியர்கள் வழிபாட்டு குழுவினர் மற்றும் அழகப்பபுரம் இறைமக்கள் சிறப்பித்தனர். காலை 6.30 மணி திருப்பலியை புனித அந்தோனியார் தொடக்கப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளியினர் சிறப்பித்தனர். மாலை 6 மணிக்கு ஜெபமாலை, தட்டு தேர் பவனி, கொடியேற்றம் நடைபெற்றது.

தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோனி தலைமை வகித்து கொடியேற்றினார். இரவு 9 மணிக்கு மும்பை வாபி வாழ் அழகை இறை மக்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை செல்வராயர், உதவிப் பங்குத்தந்தை மரியசுவின், பங்கு பேரவை துணைத் தலைவர் வி.ஏ.எ.ராஜன், செயலாளர் டி.ற்றி.செல்லத்துரை, துணைச் செயலாளர் ஜார்ஜ் மலர்க்கொடி, பொருளாளர் மரிய ஜார்ஜ், அருட்சகோதரிகள், பங்கு இறை மக்கள் ஆகியோர் செய்து இருந்தனர்.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்