அளவுக்கு அதிகமாக லோடு ஏற்றிய வைக்கோல் வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம்

வத்திராயிருப்பு, ஜன.5: வத்திராயிருப்பு பகுதியில் வாகனங்களில் அளவுக்கு அதிகமாக வைக்கோல் ஏற்றி செல்வதால் விபத்து அபாயம் நிலவுகிறது. வத்திராயிருப்பு சுற்று வட்டார பகுதிகளில் பிரதானமாக நெல் விவசாயம் நடைபெற்று வருகிறது. தற்போது அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நெல் அறுவடையின் போது வரும் வைக்கோல்களை வெளி மாவட்டங்கள் மற்றும் கேரளாவிற்கு விற்பனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் அறுவடை செய்யப்பட்ட வைக்கோல்களை ஏற்றும்போது அளவுக்கு அதிகமாக வாகனங்களில் ஏற்றுவதால் சாலை முழுவதும் மறைக்கும்  அளவிற்கு உள்ளது. இவ்வாறு கொண்டு செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அது மட்டுமல்லாது போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுவதால் பிற வாகனம் செல்வதற்கு வழியில்லாமல் மிகுந்த சிரமத்துடனேயே சென்று வருகின்றனர். அளவுக்கு அதிகமாக வைக்கோல்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்