அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை சாப்பிட்டு மனு கொடுக்க வந்த பெண்-கலெக்டர் ஆபிசில் பரபரப்பு

தர்மபுரி : பென்னாகரம் அருகே கள்ளிபுரம் கிழக்கு கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(38), பெயிண்டர். இவரது மனைவி ஆர்த்தி(32). இவர் நேற்று, தனது கணவருடன் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார். கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பிற்கு இருந்த போலீசார் ஆர்த்தியிடம் விசாரித்த போது, தனது சொத்து பிரச்னையில் போலீசார் நடவடிக்கை எடுக்காததால், தற்கொலை செய்யும் எண்ணத்தில் 30க்கும் மேற்பட்ட மாத்திரைகளை சாப்பிட்டதாகவும், கையில் தற்கொலை கடிதத்தை வைத்துள்ளதாகவும் கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் அவரை, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அவரிடம் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  இதுகுறித்து ஆர்த்தி கூறியதாவது: எங்கள் கிராமத்தை சேர்ந்த எனது உறவினர் பெண் ஒருவர், எங்களது பெற்றோருக்கு சொந்தமான வீட்டின் பேரில் அடமான கடன் ₹1.5 லட்சம் வாங்கி தருவதாக கூறி என்னை ஏமாற்றி, எங்கள் வீட்டின் பத்திரத்தை வாங்கி வைத்துக் கொண்டார். பத்திரத்தை திருப்பி கேட்ட போது, ₹2.6 லட்சம் கொடுத்தால் தான் வீட்டு பத்திரத்தை திருப்பி தருவதாக கூறி விட்டார். பணத்தை திருப்பி செலுத்தியும், பத்திரம் கிடைக்கவில்லை. இது தொடர்பாக பென்னாகரம் போலீசில் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால், தற்கொலை செய்யும் எண்ணத்தில் என்னிடம் இருந்த வயிற்றுவலி, இருமல், சளி உள்ளிட்ட 30 மாத்திரைகள் வரை சாப்பிட்டு விட்டேன். எனக்கு நியாயம் கிடைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். …

Related posts

நாகை அருகே 200 கிலோ கஞ்சா பறிமுதல்: 4 பேர் கைது

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

மக்கள் பணி, கட்சிப் பணியை தொய்வின்றி தொடர்வோம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவு