குன்னம், ஏப்.5: பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே அல்லிநகரம் சாலையில் குன்னம் எஸ்எஸ்டி குழுவினர், சமூக பாதுகாப்பு தனி வட்டாட்சியர் தேன்மொழி , காவலர்கள் மோகன்ராஜா, மீனா, கருணாகரன் ஆகியோர் அடங்கிய குழுவினர் வாகன சோதனை நடத்தினர். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த அரியலூரைச் சேர்ந்த ஷாபர்ருல்லா (58) என்பவர் ரூ.80,000த்தை எடுத்து சென்றது தெரிந்தது. மேலும் அவர் கொண்டு சென்ற பணத்திற்கு உரிய ஆவணம் இல்லாததால் மேற்கொண்டு தொகையை பறிமுதல் செய்தனர். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.80,000த்தை குன்னம் உதவி தேர்தல் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.