அலைகழித்தால் நடவடிக்கை நகராட்சி பகுதியில் பல மாதமாக வரி பாக்கி 7 கடைகளுக்கு சீல்வைப்பு

புதுக்கோட்டை, ஆக.30: புதுக்கோட்டை நகராட்சி பகுதியில் பல மாதங்களாக வரி செலுத்தாத 7 கடைகளுக்கு அலுவலர்கள் நேற்று சீல் வைத்தனர். புதுக்கோட்டை நகராட்சி பகுதியில் பல்வேறு இடங்களில் நகராட்சிக்கு சொந்தமான கடைகள் உள்ளது. இந்த கடைகளுக்கு வாடகை நிர்ணயம் செய்து வியாபாரிகளுக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இதில் மாதம் மாதம் நகராட்சிக்கு செலுத்த வேன்டிய வரிகளை நகராட்சி வருவாய்த் துறை அலுவலர்கள் வசூலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சில கடைகளுக்கு கடந்த சில மாதங்களாக வரி செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து நகராட்சி ஆணையர் (பொறுப்பு) வீரமுத்துக்குமார் உத்தரவின்பேரில் வருவாய
அலுவலர்(பொறுப்பு) பாசித் தலைமையில் நேற்று புதுக்கோட்டை நகராட்சிக்கு சொந்தமான டவுன்ஹால் சந்தைப்பேட்டை திருக்கோகரணம் ராமலிங்கம் தெரு வில் உள்ள 7 கடைகளுக்கு பல மாதங்களாக நிலுவையில் உள்ள வாடகை கடைகளை பூட்டி சீல் வைக்கப்பட்டது.

நகராட்சிக்கு சொந்தமான கடைகளுக்கு முறையாக வரி செலுத்தவில்லை என்றால் சீல் வைக்கும் பணி தொடரும் என நகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர். விரைவில் கல்விகடன் முகாம் விவசாயிகளின் பிள்ளைகள் உயர்கல்வி படிக்க வங்கிகள் கடன் வழங்க மறுக்கின்றனர் என்று தெரிவித்தனர். அப்போது குறிக்கிட்ட கலெக்டர் மெர்சிரம்யா கல்வி கடன் சிறப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. விரைந்து முகாம் நடக்கும் தேதி அறிவிக்கப்படவுள்ளது. இதற்கென ஒரு இணையளம் உருவாக்கப்படவுள்ளது என்றார்.

 

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை