அலட்சிய அதிமுகவால் மக்கிப் போன மண்புழு உரம் திட்டம்-செயல்படுத்த விவசாயிகள் கோரிக்கை

திருச்சுழி : கடந்த அதிமுக ஆட்சியன் அலட்சியப்போக்கால் திருச்சுழி, நரிக்குடி ஒன்றியங்களில் மண்புழு உரம் திட்டம் முடங்கி விட்டது என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.திருச்சுழி ஒன்றியத்தில் 40 ஊராட்சிகளும், நரிக்குடி ஒன்றியத்தில் 44 ஊராட்சிகளும் உள்ளன. இப்பகுதி மக்களில் பெரும்பாலானோர் விவசாயத்தையே நம்பி உள்ளனர். விவசாய நிலங்களில் நல்ல விளைச்சல் தரும் விதமாக இயற்கை உரங்களை பயன்படுத்த வேண்டும் என அரசு அறிவுறுத்தி வருகிறது.இதற்காக ஒவ்வொரு ஊராட்சியிலும் பல லட்ச ரூபாய் செலவில் மண்புழு உரம் தயாரிக்கும் கூடம் அமைக்கப்பட்டது. அக்கூடங்களில் வேளாண் கழிவுகளை கொட்டி, மட்க வைத்து மண்புழுக்களை வளரவிட்டு, கழிவுகளை சத்தான உரமாக மாற்ற ஏற்பாடு செய்யப்பட்டது. இங்கு தயாரிக்கப்படும் மண்புழு உரத்தை வேளாண் துறை மூலம் மலிவு விலையில் விவசாயிகளுக்கு விற்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், திருச்சுழி, நரிக்குடி ஒன்றியங்களில் அமைக்கப்ட்ட மண்புழு உரக் கூடங்களில் இதுவரை எந்த இயற்கை உரமும் தயாரிக்கப்படவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து இப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ‘பல இடங்களில் மண்புழு கூடங்களுக்காக அமைக்கப்பட்ட கூரை செட்டுகள் சேதமடைந்து வெறும் காட்சிப்பொருளாக உள்ளது. ஏற்கனவே, விவசாய நிலங்களில் செயற்கை உரங்களை பயன்படுத்தி, நிலங்கள் பாழ்பட்டு கிடக்கின்றன. இந்நிலையில், மண்புழு உரங்கள் தயாரிக்கும் கூடங்கள் அமைக்கப்பட்டு, இயற்கை உரங்கள் மலிவு விலையில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தோம். ஆனால், இதுபோன்ற நல்ல திட்டங்கள் கடந்த அதிமுக ஆட்சியின் அலட்சியபோக்கான நடைமுறைகளால் வீணாகி விட்டன. எனவே, மாவட்ட நிர்வாகம் முடங்கி போன இத்திட்டத்தை மீண்டும் செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க ேவண்டும்’ என்றனர்….

Related posts

குமரி: போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ்

போலி சான்றுகள் விற்ற வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

சென்னையில் பால்கனி இடிந்து விழுந்து முதியவர் பலி