அறுவடைக்கு தயாரான நிலங்களில் தண்ணீர் பாய்ச்ச வேண்டாம்: பழநி வேளாண் துறை அட்வைஸ்

பழநி, ஏப். 18: அறுவடைக்கு தயராக இருக்கும் விவசாய நிலங்களில் தண்ணீர் பாய்ச்ச வேண்டாமென பழநி வேளாண் துறையினர் ஆலோசனை வழங்கி உள்ளனர். பழநி மற்றும் தொப்பம்பட்டி வட்டார கிராமங்கள் விவசாயத்தை அடிப்படையாக கொண்டவை. இக்கிராமங்களின் விவசாயம் பாலாறு- பொருந்தலாறு அணையை நம்பியும், கிணற்று பாசனம் மற்றும் மானாவாரியாகவும் நடந்து வருகின்றன. கடந்த ஆண்டில் தொப்பம்பட்டி பகுதியில் சம்பா பருவத்தில் சுமார் 2 ஆயிரத்து 500 ஏக்கரில் நெற்பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. இதில் சம்பா பருவத்தில் கீரனூர் பகுதி விவசாயிகள் தாமதமாக நெய்பயிர் நடவில் ஈடுபட்டனர்.தற்போது இந்த நெற்பயிர்கள் கதிர் முற்றி அறுவடைக்கு தயாராக உள்ளன.

இந்நிலையில் கீரனூர் பகுதியில் காற்றின் காரணமாக நெற்பயிர்கள் தரையில் சாய்ந்துள்ளன. இச்சூழ்நிலையில் விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்து தொப்பம்பட்டி வேளாண் உதவி இயக்குநர் காளிமுத்து கூறியதாவது: தொப்பம்பட்டி மற்றும் கீரனூர் பகுதியில் இந்த முறை நெற்பயிர் நல்ல விளைச்சலை பெற்றுள்ளன. விளைச்சலுக்கு தயாராக இருக்கும் விவசாய நிலங்களில் தண்ணீர் பாய்ச்ச வேண்டியதில்லை. இதனால் நீரை சேமிப்பதுடன், அறுவடை இயந்திரம் சிரமமின்றி விளைநிலங்களுக்குள் செல்வதற்கு ஏதுவாக இருக்கும். இவ்வாறு கூறினார்.

Related posts

சாத்தூரில் இன்று மின்தடை

திமுக ஆலோசனை கூட்டம்

சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி