அறிகுறிகள் தென்பட்டால் கட்டாயம் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்: மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவுறுத்தல்

சென்னை: கூட்ட நெரிசலில் சென்று வருவோருக்கு அறிகுறிகள் தென்பட்டால் கட்டாயம் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது. அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ண் எழுதியுள்ள சுற்றறிக்கையில், அனைத்து அலுவலகங்கள், கல்வி நிலையங்களில் மற்றும் கூட்ட நெரிசல் உள்ள இடங்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும், கூட்ட நெரிசல் உள்ள பகுதிகளுக்கு சென்று வரும் மக்கள் அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும், அறிகுறி தென்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார். மேலும், கொரோனா பரிசோதனை முடிவு வரும் வரை அறிகுறி உள்ளவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.தொற்று உறுதியானால் மருத்துவத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், தொற்று இல்லை என முடிவு வந்தால் தொடர்ந்து உடல்நிலையை சுய கண்கானிப்பு செய்து கொள்ள வேண்டும் என குறிப்பிட்ட அவர், உள்ளாட்சி அமைப்புகள், தன்னார்ரவலர்கள், குடியிருப்பு நலசங்கத்தினர் உதவியுடன் தடுப்பூசியை அதிகளவில் செலுத்த முயற்சி எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு வலியுறுத்தியுள்ளார்….

Related posts

குப்பையில் கிடந்த துப்பாக்கி

வீட்டை இடிக்க அதிகாரிகள் வந்ததால் நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மழைநீர் கால்வாயை முறையாக அமைக்காததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை கோரி பெண்கள் மறியல்