அறந்தாங்கி எல்.என்.புரத்தில் புதிய நூலகம் திறப்பு விழா

அறந்தாங்கி, ஆக.4: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி எல்.என்.புரத்தில் புதிய நூலகம் திறப்பு விழாவில் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழக முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் சட்டமன்ற தொகுதிக்கு ஒரு நூலகம் அமைப்பது என இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு உள்ளது. திமுக இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தலைமையில், சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் முன்னிலையில் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இளையராஜாகலந்துகொண்டு நூலகத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மணிராஜன், நகர செயலாளர் ராஜேந்திரன், ஒன்றிய கழக செயலாளர்கள் பொன். கணேசன், சக்தி.ராமசாமி, கிழக்கு ஒன்றிய செயலாளர் குமார் நகர்மன்ற தலைவர் ஆனந்த் ஒன்றியகுழு தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன் மாவட்ட நெசவாளர் அணி தலைவர் பழனிதேவா, இளைஞரணி நிர்வாகி உதயம்சரண், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் பாஸ்கரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் தமிழ்ராசு, நசுருதீன், அருண் சேகர், கவிக்குமார், முகமது ரபிக், தகவல் தொழில்நுட்ப அணி ஹரிவிமலாதி, நகர இளைஞரணி அமைப்பாளர் சேக் இஸ்மாயில், வட்டக் கழக, மாநில, ஒன்றிய, கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி