அறந்தாங்கி அரசு கல்லூரி மாணவிகளுக்கு ரத்த சோகை, பரிசோதனை விழிப்புணர்வு முகாம்

 

அறந்தாங்கி, ஜன.5: அறந்தாங்கி பெருநாவலூர் அரசுக் கலை அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டமும், தனியார் நிறுவனமும் இணைந்து மாணவிகளுக்கு ரத்த சோகை விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை முகாம் நடத்தியது. முகாம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இம்முகாமிற்கு கல்லூரி முதல்வர் (பொ) பேராசிரியர் பாலமுருகன் தலைமை வகித்தார். தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் காளிதாஸ், கணினி அறிவியல் துறைத்தலைவர் முனைவர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஐடிசி மனித வள மேம்பாட்டு அலுவலர் சந்திரகிஷோர் முகாம் குறித்து அறிமுக உரையாற்றினார். நிறுவனத்தின் மருத்துவ அலுவலர் டாக்டர் காவியலக்ஷ்மி, இரும்புச்சத்து குறைபாடு காரணமாகப் பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்து மாணவியர்களிடையே விளக்கிப்பேசினார். திருச்சி நியூபர்க் ரத்தப்பரிசோதனை நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் ரிஃபாயா பேகம், ரத்த சோகைக்கான காரணங்கள், அறிகுறிகள், விளைவுகள் மற்றும் மருத்துவ ஆலோசனைகளை எடுத்துரைத்தார்.

முகாமில் நிலைய தொழில்நுட்ப வல்லுநர்கள் ரோஸி மற்றும் இப்ராஹிம் பாஷா ஆகியோர் அடங்கிய குழுவினர் மாணவிகளுக்கு மருத்துவ பரிசோதனையை நடத்தினர். முன்னதாக கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் பழனித்துரை வரவேற்றார். ரெட் ரிப்பன் கிளப் ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

Related posts

பதுக்கிய பட்டாசுகள் பறிமுதல்

மது அருந்த பணம் தராததால் தற்கொலை

கல்லூரி விடுதியில் மாணவி மாயம்