அறந்தாங்கி அடுத்த பிராமணவயல் கிராமத்தில் மாட்டு வண்டி எல்கை பந்தயம்

அறந்தாங்கி, ஜூலை 9: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த பிராமணவயல் கிராமத்தில் உள்ள  செல்வ விநாயகர் கோயில் வருடாபிஷேக விழாவை முன்னிட்டு முதலாம் ஆண்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இந்த போட்டியில் மதுரை, திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட மாடுகள் போட்டியில் கலந்து கொண்டன. இதில் பெரிய மாடு, நடு மாடு, கரிச்சான் மாடு என மூன்று பிரிவுகளாக நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட மாடுகள் போட்டியில் கலந்து கொண்டன. இரட்டை மாட்டு வண்டிகள் கலந்து கொண்டு நிர்ணயிக்கப்பட்ட பந்தைய இலக்கினை நோக்கி ஒன்றையொன்று முந்திச் சென்றன. போட்டியில் வெற்றி பெற்ற ஒவ்வொரு பிரிவுகளிலும் முதல் மூன்று இடங்களை பிடித்த மாட்டின் உரிமையாளர்களுக்கு ரூ.1.14 லட்சம் ரொக்கப்பரிசும், கோப்கைகளும் வழங்கப்பட்டது. பந்தைய நிகழ்ச்சியை காண சாலையின் இரு புறமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் கண்டு ரசித்தனர். நாகுடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

புதுக்கோட்டை,ஜூலை 9: புதுக்கோட்டையில் நடந்த குறைதீர் கூட்டத்தில் பெறப்பட்ட 436 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் மெர்சி ரம்யா அனைத்து துறை அலுவலர்களுக்கும் அறிவுறுத்தி உள்ளார். புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது;பொதுமக்களின் குறைகளை மனுக்களாக பெற்று தீர்வு காணும் வகையில், வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் இன்றையதினம் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 463 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.
இம்மனுக்களின் மீது விசாரணை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், ஒரு மாற்றுத்திறனாளிக்கு ₹10,000 மதிப்பில் மடக்கு சக்கர நாற்காலியும், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ₹13,500 வீதம் ₹27,000 மதிப்பிலான தக்க செயலியுடன் கூடிய திறன் பேசிகளும் என மொத்தம் 3 மாற்றுத்திறனாளிகளுக்கு ₹37,000 மதிப்பிலான பல்வேறு உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது என்றும் கலெக்டர் மெர்சி ரம்யா, தெரிவித்தார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) ரம்யாதேவி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ஷோபா, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் தர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related posts

ராஜபாளையம் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம்

முட்புதர்களாக காட்சியளிக்கும் அர்ச்சுனா ஆற்றை தூர்வார வேண்டும்: மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை

வெம்பக்கோட்டை அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம்