அறநிலையத்துறையின் 1.5 கோடி மதிப்பு நிலம் அதிரடி மீட்பு

பெரம்பூர், செப். 30: ஓட்டேரி குன்னூர் நெடுஞ்சாலையில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான செல்வ பிள்ளையார் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு சொந்தமான 1440 சதுர அடி உள்ள கட்டிடம் ஓட்டேரி செல்வபெருமாள் கோயில் தெரு பகுதியில் உள்ளது. இந்த கட்டிடத்திற்கு இதுவரை சுமார் மூன்று லட்ச ரூபாய் வரை வாடகை கட்டவில்லை எனவும் பலமுறை இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை மூலம் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு நோட்டீஸ் வழங்கியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இதையடுத்து இந்து சமய அறநிலையத்துறை சென்னை மண்டலம் 1 இணை ஆணையர் முல்லை தலைமையில் துணை ஆணையர் நித்தியா முன்னிலையில் காவல்துறை உதவியோடு நேற்று காலை குறிப்பிட்ட அந்த இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி அந்த இடத்தை கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.1.5 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்