அரையிறுதிக்கு முன்னேறினார் கச்சனோவ்

நியூயார்க்: யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் விளையாட, ரஷ்ய வீரர் கரென் கச்சனோவ் தகுதி பெற்றார். காலிறுதியில் ஆஸ்திரேலியாவின் நிக் கிர்ஜியோசுடன் (27 வயது, 25வது ரேங்க்) மோதிய கச்சனோவ் (26 வயது, 31வது ரேங்க்) 7-5 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். 2வது செட்டில் கிர்ஜியோஸ் 6-4 என வென்று பதிலடி கொடுக்க சமநிலை ஏற்பட்டது. 3வது செட்டை கச்சனோவ் 7-5 என கைப்பற்ற, டை பிரேக்கர் வரை கடும் போராட்டமாக அமைந்த 4வது செட்டில் கிர்ஜியோஸ் 7-6 (7-3) என வென்று மீண்டும் சமநிலை ஏற்படுத்தினார். இதனால் 5வது மற்றும் கடைசி செட்டில் அனல் பறந்தது. அதில் கிர்ஜியோசின் சர்வீஸ் ஆட்டத்தை முறியடித்து புள்ளிகளைக் குவித்த கச்சனோவ் 7-5, 4-6, 7-5, 6-7 (3-7), 6-4 என்ற செட் கணக்கில் 3 மணி, 39 நிமிடம் போராடி வென்று முதல் முறையாக கிராண் ஸ்லாம் தொடரின் அரையிறுதிக்கு முன்னேறினார்.5 செட்களிலும் விளையாடி போராடி தோற்றதால் கடும் விரக்தியடைந்த கிர்ஜியோஸ், தனது டென்னிஸ் மட்டைகள் அனைத்தையும் ஆக்ரோஷமாக தரையில் ஓங்கி ஓங்கி அடித்து உடைத்தார். அவரது இந்த செயல் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.மற்றொரு காலிறுதியில் நார்வே வீரர் கேஸ்பர் ரூட் (23 வயது, 7வது ரேங்க்) 6-1, 6-4, 7-6 (7-4) என்ற நேர் செட்களில் இத்தாலியின் மேட்டியோ பெரட்டினியை (26 வயது, 14வது ரேங்க்) வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தார். இப்போட்டி 2 மணி, 36 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. அரையிறுதியில் கச்சனோவ் – கேஸ்பர் மோத உள்ளனர். மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் அமெரிக்காவின் கோகோ காஃபுடன் (18 வயது, 12வது ரேங்க்) மோதிய பிரான்ஸ் நட்சத்திரம் கரோலின் கார்சியா (28 வயது, 17வது ரேங்க்) 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தினார். இப்போட்டி 1 மணி, 37 நிமிடத்துக்கு நீடித்தது. மற்றொரு காலிறுதியில் துனிசியாவின் ஆன்ஸ் ஜெபர் (28 வயது, 5வது ரேங்க்) 6-4, 7-6 (7-4) என்ற நேர் செட்களில் குரோஷியாவின் அய்லா டாம்யனோவிச்சை (29 வயது, 46வது ரேங்க்) வீழ்த்தினார். அரையிறுதியில் அவர் கார்சியாவின் சவாலை எதிர்கொள்கிறார்….

Related posts

13 ரன் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியிடம் இந்தியா அதிர்ச்சி தோல்வி

தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக டி20 போட்டி: வெற்றியை தொடங்குமா இந்தியா

யுரோ கோப்பை கால்பந்து; ஸ்பெயின், பிரான்ஸ்: வெளியேறியது ஜெர்மனி, போர்ச்சுகல்