அரையாண்டு விடுமுறைக்கு பின் தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு

 

தஞ்சாவூர், ஜன.3: அரையாண்டு விடுமுறை முடிந்து தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. தமிழ்நாட்டில் பள்ளி மாணவ -மாணவிகளுக்கான அரையாண்டு மற்றும் 2ம் பருவ தேர்வுகள் கடந்த டிசம்பர் 13ம் தேதி தொடங்கி 22ம்தேதி வரை நடத்தப்பட்டன. தேர்வு முடிந்த பின்னர் 23ம் தேதியிலிருந்து நேற்று வரை மாணவர்களுக்கு 10 நாட்களுக்கு அரையாண்டு விடுமுறை வழங்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று விடுமுறை முடிந்து மீண்டும் தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டன.

அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் , மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டன. இதனை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களாக பள்ளி வகுப்பறைகள் சுத்தம் செய்யும் பணி உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடு பணிகள் நடந்து வந்தன. நேற்று காலையில் மாணவ-மாணவிகள் விடுமுறை முடிந்து ஆர்வத்துடன் பள்ளிக்கு சென்றனர்.தொடர்ந்து மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டன. இதேபோல் அனைத்து மாவட்டங்களிலும் அரையாண்டு விடுமுறைக்கு பின்னர் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்