அரைக்கம்பத்தில் தேசியக்கொடிபழனி முருகன் கோயிலுக்கு ரூ.9 லட்சம் மதிப்பிலான நாட்டுச் சர்க்கரை கொள்முதல்

 

ஈரோடு: பழனி, தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு ரூ. 9 லட்சம் மதிப்பிலான நாட்டுச் சர்க்கரை மற்றும் வெல்லம் நேற்று முன் தினம் கொள்முதல் செய்யப்பட்டது. பழனி, தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பிரசாதங்கள் தயாரிக்க, கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இருந்து கரும்புச் சர்க்கரை எனப்படும் நாட்டுச் சர்க்கரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக நேற்று முன் தினம் நடைபெற்ற ஏலத்தில் பங்கேற்க சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 1,162 மூட்டைகள் நாட்டுச்சர்க்கரையை கொண்டு வந்திருந்தனர்.

இதில் 60 கிலோ எடையிலான மூட்டை, முதல் தரம், குறைந்தபட்ச விலையாக ரூ. 2,580க்கும், அதிகபட்சமாக ரூ. 2,590க்கும் விற்பனையானது. இரண்டாம் தரம், ஒரே விலையாக மூட்டை
ரூ.2,480க்கும் விற்பனையானது.இதில், மொத்தம் 19 ஆயிரத்து 680 கிலோ எடையிலான நாட்டுச் சர்க்கரை மூட்டைகள் மொத்தம் ரூ.9 லட்சத்து 27 ஆயிரத்து 550க்கு விற்பனையாகின. இதேபோல, உருண்டை வெல்லம் முதல் தரம் 30 கிலோ சிப்பம் ஒரே விலையாக ரூ.1,350 எனும் விலையில், 1,800 கிலோ எடையிலான 60 மூட்டைகள் ரூ. 81 ஆயிரத்துக்கு விற்பனையாகின. ஏலத்தில் நாட்டுச் சர்க்கரை, வெல்லம் இரண்டும் சேர்த்து மொத்தம் ரூ.9 லட்சத்து 8 ஆயிரத்து 550க்கு கொள்முதல் செய்யப்பட்டதாக விற்பனைக்கூட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை