அரூரில் ஆப்பிள் கிலோ ரூ.130க்கு விற்பனை

 

அரூர், ஏப்.7: தர்மபுரி மாவட்டத்திற்கு கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து ஆப்பிள், ஆரஞ்சு உள்ளிட்ட பழங்கள் வருகிறது. தர்மபுரி நகரில் உள்ள மண்டிகளில் இருந்து மாவட்டம் முழுவதுமாக பல்வேறு ஊர்களுக்கு பழங்கள் விற்பனைக்கு அனுப்பப் படுகிறது.  தவிர, சீசன் காரணமாக விலை குறையும் போது வியாபாரிகள் மொத்தமாக வாங்கி வந்து மினிடேர் உள்ளிட்ட வாகனங்களில் வைத்து சாலையோரம் மற்றும் கிராமங்களில் நேரடியாக விற்பனையில் ஈடுபடுகின்றனர்.

கடந்த சில மாதங்களாக காஷ்மீர், பெங்களூரு ஆப்பிள் வரத்து குறைந்ததால் வெளிநாட்டு ஆப்பிள்கள் கிலோ ரூ.180 வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது சிம்லா ஆப்பிள் அதிக அளவில் வரத்துவங்கியுள்ளதால் விலை குறைந்துள்ளது. நேற்று அரூர் பகுதியில் தள்ளுவண்டி மற்றும் ஆட்டோக்களில் வைத்து ஒரு கிலோ ஆப்பிள் ரூ.110 முதல் ரூ.130 வரை விற்பனை செய்யப்பட்டது. விலை குறைந்ததால் மக்கள் ஆர்வத்துடன் வாங்கிச்சென்றனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை