அருப்புக்கோட்டையில் ரோட்டில் ஆறாய் ஓடுது குடிநீர்-தட்டுப்பாட்டிலும் தொடருது அலட்சியம்

அருப்புக்கோட்டை :அருப்புக்கோட்டை பகுதிகளில் குடிக்க தண்ணீர் இல்லாமல் மக்கள் தினம்தோறும் போராடிக் கொண்டிருக்கும் நேரத்தில், அரசு அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மையால் குழாய் பைப்கள் சேதமடைந்து பலமணி நேரம் தண்ணீர் வீணாகிக் கொண்டிருக்கிறது.அருப்புக்கோட்டை ரயில்வே பீடர் ரோட்டில் குடிநீர்க்குழாய் உடைந்து பல ஆயிரம் லிட்டர் தண்ணீர் வீணாகி செல்கிறது. இதை உடனடியாக சரி செய்ய ேவண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.அருப்புக்கோட்டை மதுரை ரோட்டில் நகராட்சி குடிநீர் நீரேற்றும் நிலையம் உள்ளது. இங்குள்ள மேல்நிலைத் தொட்டிகளில் குடிநீர் ஏற்றப்பட்டு திருச்சுழி ரோட்டில் உள்ள குடிநீர் மேல்நிலைத் தொட்டி மற்றும் நகரில் உள்ள குடிநீர் மேல்நிலைத் தொட்டிகளுக்கு குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு சென்று ஏற்றப்படுகிறது. இந்நிலையில் வைகை குடிநீர் தரைமட்டத் தொட்டியில் ஏற்றப்பட்டு, அதன்மூலம் திருச்சுழி ரோட்டில் உள்ள குடிநீர் மேல்நிலைத் தொட்டிக்கு கொண்டு செல்லப்படும் குடிநீர் குழாய் ரயில்வே பீடர் ரோட்டில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு  சேதமடைந்து குடிநீர் வீணாவதாக அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். அதன்பேரில், நகராட்சிப் பொறியியல் துறை பிரிவு பணியாளர்கள் வந்து சீரமைத்துச் சென்றனர்.ஆனால் நேற்று முன்தினம் மீண்டும் அதே இடத்தில் குடிநீர் கசிவு ஏற்பட்ட நிலையில், நேற்று மேலும் குழாய் சேதமடைந்து பல ஆயிரம் லிட்டர் குடிநீர்  வீணானது. ஏற்கெனவே, அருப்புக்கோட்டையில் சீரான குடிநீர் விநியோகம் இல்லாத நிலையில், தற்போது பல ஆயிரம் லிட்டர் குடிநீர் வீணாகி செல்கிறது. எனவே, நகராட்சி நிர்வாகம் விரைவில் குழாயை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், கந்தக பூமியான விருதுநகர் மாவட்டத்தில் தண்ணீருக்காக பொதுமக்கள் படும்பாடு சொல்லி மாளாது. இதில் நகரின் பல பகுதிகளில் ஆங்காங்கே குழாய்கள் உடைந்து குடிநீர் பல ஆயிரம் லிட்டர் கணக்கில் வீணாகி கொண்டிருக்கிறது. இதனால், மேலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு, பெண்கள் காலிக்குடங்களோடு போராட்டங்களில் ஈடுபட வேண்டியுள்ளது. எனவேகுடிநீர் விஷயத்தில் அலட்சியத்தோடு செயல்படும் அதிகாரிகள் மீது  மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டும், என்றனர்….

Related posts

மக்களுக்கு சேவையாற்றுவோரை கவுரவிக்கும் வகையில் விஜயகாந்த், ஜி.விஸ்வநாதன் உள்ளிட்ட 9 பேருக்கு விருது: எஸ்டிபிஐ கட்சி அறிவிப்பு

பாடப்புத்தகத்தில் நாகப்ப படையாட்சியின் வரலாறு இடம்பெற நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அன்புமணி கோரிக்கை ஆன்லைன் சூதாட்டத்திற்கு அரசு தடை பெற வேண்டும்