அருந்ததிய சமுதாய மக்களுக்கு பட்டா வழங்க கோரி கலெக்டரிடம் மனு

தஞ்சாவூர், ஏப்.11: அருந்ததிய சமுதாய மக்களுக்கு பட்டா வழங்க வலியுறுத்தி தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறை தீர் கூட்டத்தில் அருந்ததிய சமுதாய மக்கள், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் நாத்திகன் தலைமையில் வந்து ஒரு மனு அளித்தனர். தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா தலைமை வகித்தார். இதில் அருந்ததிய சமுதாய மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: அருந்ததிய சமுதாய மக்கள் ஆலமரத்தெருவில் வசித்து வந்தனர். அவர்கள் வசிப்பிடம் ரெயில்வேக்கு சொந்தமானது எனக் கூறி மாற்று இடம் வருவாய்த்துறை சார்பில் நீலகிரி தெற்கு தோட்டம் மானோஜிப்பட்டி கிராமத்தில் 250 பேருக்கு கடந்த 2007-ம் ஆண்டு வழங்கப்பட்டது.

அது முதல் அங்கு மக்கள் குடியிருந்து வருகிறார்கள். ஆனால் அதன்பின் உட்பிரிவு செய்து பட்டா வழங்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல், வருவாய் ஆவணங்களில் உரிய போக்குவரத்து திருத்தம் செய்யப்படாமல் அப்படியே உள்ளது. இதனால் பதிவு அலுவலகத்தை தொடர்பு கொள்ளும்போது பத்திரப்பதிவு செய்ய தடை உள்ளது. எனவே அருந்ததிய சமுதாய மக்களுக்கு வழங்கப்பட்ட மனைகளுக்கு அம்பேத்கர் நகர் என பெயரிட்டு உட்பிரிவு செய்து பட்டா வழங்கவும், அரசு வருவாய்த்துறை ஆவணங்களில் போக்குவரத்து திருத்தம் செய்யும் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சாத்தூரில் இன்று மின்தடை

திமுக ஆலோசனை கூட்டம்

சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி