அரிய சிகிச்சை மூலம் விவசாயி உயிரை காப்பாற்றிய அப்போலோ மருத்துவமனை

சென்னை: அரிய சிகிச்சை மூலம் விவசாயி ஒருவரின் உயிரை  அப்போலோ மருத்துவமனை காப்பாற்றியுள்ளது. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் காமேஷ்வர் ராவ் (41). மிட்ரா கிளிப் பொறுத்துதல் எனும் அரிய அறுவை சிகிச்சை சிகிச்சை செய்யப்பட்டது. இதன்மூலம், அப்போலோ மருத்துவமனை இவரின் உயிரைக் காப்பாற்றியுள்ளது. இந்த சிகிச்சை முறைக்குப் பிறகு சில நாட்களுக்குள் நோயாளி தனது அன்றாடப் பணிகளுக்குத் திரும்பினார். மேலும், அவருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை கூட தேவையில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து அப்போலோ மருத்துவமனைகள் குழுமத்தின் துணை செயல் தலைவர் ப்ரீதா ரெட்டி கூறியதாவது: இந்தியாவில் மிட்ரா கிளிப் செயல்முறையை மேற்கொள்ள அங்கீகாரம் பெற்ற சில மருத்துவமனைகளில் அப்போலோ மருத்துவமனையும் ஒன்றாகும். இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் நோயாளியின் உயிரைக் காப்பாற்றுவது பலருக்கு நம்பிக்கையை அளிப்பதாக அமைந்துள்ளது. இதய நோயாளிகளில் கடுமையான / இறுதிநிலை இதய செயலிழப்பு ஏற்படுபவர்கள் 10 சதவீதம் வரை உள்ளனர். இதய மாற்று சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு சில சமயங்களில் அதற்கான தேவையை இல்லாமல் ஆக்கக் கூடிய செயல்பாட்டு மேம்பாடுகளுக்கு கூட இந்த மிட்ரா கிளிப் வழிமுறை வழிவகுக்கலாம் என ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்….

Related posts

மின்னணு உதிரிபாகங்கள் தயாரிப்பு தமிழ்நாட்டுக்கு பெரிய போட்டி: தகவல் தொழில்நுட்ப செயலாளர் பேச்சு

சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகளின்றி 2 விமானங்கள் ரத்து

தேசிய சப்-ஜூனியர் பூப்பந்தாட்ட போட்டி தங்க பதக்கங்களை குவித்து தமிழ்நாடு அணி சாம்பியன்: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று வரவேற்பு